மதுவிலக்கை அமல்படுத்தினால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்: ஜெ. முதல்வராவார் - வைகோ
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் 2008ஆம் ஆண்டு ‘ஈழத்தில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் மதிமுக சார்பில் நடந்த கருத்தரங்கத்தில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக, வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக வைகோ நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார். இவ்வழக்கின் புகார்தாரரான கியூ பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை வைகோ தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார். பின்னர், வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கயல்விழி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கூறியதாவது:
திருப்பதி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டுவதற்காக எந்தவொரு அரசியல் கட்சியும் திருப்பதிமலைக்கு செல்லவில்லை. ஆனால், மதிமுகவினர் உயிரைப் பணயம் வைத்து திருப்பதி மலைக்கே சென்று ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். அதனால் அவர்களை காவல்துறையினர் தாக்கினர்.
அதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ராஜபக்ச இந்தியா வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம். அதனால் மோடி எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும் கறுப்புக் கொடி காட்டுவோம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதை கண்டித்தும், தஞ்சையில் மீத்தேன் எரிவாயு திட்டம் கொண்டு வருவதை எதிர்த்தும் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இப்போராட்டம் 22ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு அனைத்து கட்சியினரின் ஆதரவு கோரப்படும். வரும் 23ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. இதை நான் அரசியலுக்காக சொல்லவில்லை என்று வைகோ கூறினார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications