For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர்,அமைச்சர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை... ஸ்டாலின் அதிரடி

தி.க தலைவர் வீரமணி சொன்னது போல அமைச்சர்களை உண்மை நிலை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த ஆளுநர் முன்வர வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தி.க தலைவர் வீரமணி கூறியது போல ஜெயலலிதா மரணம் பற்றி அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருவதால் அனைவரையும் உண்மை நிலை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த ஆளுநர் முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்கள் உண்மை சொல்கிறார்களா, பொய் சொல்கிறார்களா என்பதை கண்டறிய மெய், பொய் கண்டறியும் இயந்திரத்தில் அமைச்சர்களை அனுப்ப ஆளுநருக்கு அவசரம், அவசியமான வேலை உள்ளது.

Jayalalithaa death mystery : Lie detector test for TN minister : stalin

அரசியலமைப்பு சட்டத்தை கேலி கூத்தாக்கும் வகையில் உள்ள இந்த அமைச்சரவை எவ்வளவு நாள் நீடிக்க வேண்டும் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோரின் கேள்வியாக உள்ளது என்று கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தி. க தலைவர் வீரமணி கூறியது மிக சிறப்பான யோசனை என்று கூறினார்.

தமிழக அமைச்சர்களை மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களையும்,எய்ம்ஸ் மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், ஏன் ஆளுநரையும் கூட உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
MK Stalin said that the AIADMK cabinet should be subjected to a lie detector test in the wake of contradictory statements made by Ministers on whether they were given access to meet former Chief Minister Jayalalalithaa when she was undergoing treatment in a hospital in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X