இப்போது வரும் அப்பல்லோ அறிக்கைகளில் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தீர்களா?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து, அவருக்கு சிகிச்சையளித்து வரும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுவரும் அறிக்கைகள் குழப்பத்தை அதிகரித்துக் கொண்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது. இப்படித்தான் தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.
இரண்டாவது அறிக்கையில், அவர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது. அதேநேரம், ஜெயலலிதா சில தினங்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். அதன்பிறகு அலுவல்களை பார்க்க முடியும் என்று அப்பல்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

லண்டன் மருத்துவர்
அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கு ரிச்சர்ட் சொன்ன அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

எதற்கு அந்த டாக்டர்
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு எதற்காக, லண்டன் டாக்டர் வந்துள்ளார் என்று அதிமுக தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு ஐயங்கள் எழத் தொடங்கின.

இன்பெக்ஷன் இருப்பதாக கூறியது
அப்பல்லோவின் இரண்டாவது, மூன்றாவது மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக மூன்றாவது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று என குறிப்பிட்டுள்ளது. இது கூடுதல் தகவலாகும். இன்பெக்ஷன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தாலும், எந்த மாதிரி இன்பெக்ஷன், அதன் தீவிரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை.

நான்காவது அறிக்கை
இந்நிலையில்தான், மூன்றாவது அறிக்கையை காட்டிலும் அதிக மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது அறிக்கையை அப்பல்லோ நேற்று இரவு வெளியிட்டது. அதில் ஜெயலலிதா, செயற்கை சுவாச சப்போர்ட்டுடன் சிகிச்சை பெற்றுவருவதாக முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை சுவாசம்
சுவாசப் பிரச்சினை இருப்பதால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மெல்லமெல்ல, ஜெயலலிதா பெறும் சிகிச்சைகளை அப்பல்லோ வெளியிட தொடங்கியுள்ளது இரு வகையான விவாதங்களை கிளப்பியுள்ளது.

இரு வகை கருத்துக்கள்
ஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருப்பதால்தான், அப்பல்லோ மருத்துவமனை இதுகுறித்த கூடுதல் தகவல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர் இதை ஆரோக்கியமான நடவடிக்கையாக பார்க்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலை முன்பைவிட தேறிவருகிறது. எனவேதான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், இவ்வளவு தைரியமாக அவர் செயற்கை சுவாச சிகிச்சையில் இருக்கிறார் என்பதை வெளியிட்டுள்ளது. எனவே ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று வாதிடுகிறது அந்த தரப்பு.

விரைவில் வீடு திரும்ப வேண்டும்
ஆனால், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுவரும் அறிக்கைகளை கவனிப்போருக்கு ஒரு விஷயம் புரியும். முதல் இரு அறிக்கைகளிலுமே, ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என குறிப்பிட்டு வந்த அப்பல்லோ, கடந்த இரு அறிக்கைகளில், அவர் மருத்துவமனையில் மேலும் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றுதான் தெரிவித்துள்ளது. எனவே ஜெயலலிதா எப்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்பதில் அப்பல்லோ குழம்பியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். அடுத்த அறிக்கையில் அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா வீடு திரும்ப வேண்டும் என்று அப்பல்லோ குறிப்பிட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலும் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications