சிறுதாவூரில் தீ... கொடநாடு பங்களாவில் கொலை... உக்கிரத்தில் ஜெ.வின் ஆன்மா?

ஜெயலலிதாவின் ஆன்மா உக்கிரமடைந்து பழி வாங்குவதால்தான் சிறுதாவூரில் தீ விபத்து, கொடநாட்டில் கொலை என அடுத்தடுத்து துர்சம்பவங்கள் நடைபெறுவதாக கிளப்பி விடுகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை நடந்துள்ளது, சில தினங்களுக்கு முன்பு சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து எற்பட்டது இதற்குக் காரணம் ஜெயலலிதாவின் ஆன்மாவா என்று அச்சமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவில் ஓய்வு எடுப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். அவரது மரணத்திற்குப் பிறகு இந்த பங்களா கேட்பாரற்று கிடந்தது.

கடந்த வாரம் சிறுதாவூர் பங்களா அருகில் உள்ள 9 ஏக்கர் புல்வெளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 3 வாகனங்களில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

 ஆவணங்கள் எரிப்பு

ஆவணங்கள் எரிப்பு

சிறுதாவூர் பங்களாவில் இருந்த ஆவணங்களை எரித்து விட்டார்கள் என்றும் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பொருட்களை மர்ம நபர்கள் எரித்திருக்கலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால் தீ விபத்திற்குக் காரணம் ஜெயலலிதாவின் ஆன்மா உக்கிரமாக பழி வாங்கத் தொடங்கிவிட்டதாக பீதி கிளம்பியது.

 காவலாளி கொலை

காவலாளி கொலை

இதேபோல ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணி புரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஆவணங்கள் திருட்டு

ஆவணங்கள் திருட்டு

கொடநாடு எஸ்டேட்டில் ஓம்பகதூர் மற்றும் கிஷன் பகதூர் ஆகிய இருவரும் 9ம் கேட்டில் காவல் பணியில் ஈடுபட்ட வந்த போது, இரண்டு காரில் வந்த மர்ம நபர்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஓம்பகதூர் உயிரிழந்தார். மர்ம கும்பாலானது கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்களை எடுத்து சென்றிருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. கோத்தகிரி போலீசார் கொடநாடு பங்களா பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

 ஜெ., ஆன்மா

ஜெ., ஆன்மா

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையாமல் உக்கிரத்துடன் இருப்பதனாலே பல துர்சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் வசித்து வந்த பலரும் சந்தடி தெரியாமல் வெளியேறி விட்டனர். ஒருவித அச்சம் காரணமாகவே போயஸ்கார்டன் வீட்டில் வசிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

 துர் சம்பவங்கள்

துர் சம்பவங்கள்

போயஸ்கார்டன் வீட்டு சாலை பகுதியில் கூட மக்களின் நடமாட்டம் குறைந்து விட்டது. இப்போது ஜெயலலிதா ஓய்வெடுத்து வந்த சிறுதாவூர், கொடநாடு எஸ்டேட் பங்களாக்களிலும் துர் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அங்கு பணியில் இருப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

 உக்கிரமான ஆன்மா?

உக்கிரமான ஆன்மா?

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையாமல் உக்கிரத்துடன் இருப்பதாகவும், அது தனக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்கும் என்றும் பலரும் பீதியை கிளப்பி வருகின்றனர். ஆவணங்களை திருடிச் சென்றவர்களே இது போல கிளப்பி விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் எத்தனை உயிர்கள் பழியாகப் போகிறதோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+