முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: பொன்னையன்
மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் என அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பிசியோதெரபி நிபுணர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்து இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது. முதல்வர் நலம் பெற வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார். முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களின் பிரார்த்தனைகளால் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் எனவும் கூறினார் பொன்னையன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications