வெள்ள பாதிப்புகளை சீரமைக்க மோடியிடம் மேலும் ரூ. 17,431.51 கோடி கேட்டு ஜெ. கடிதம்
சென்னை: தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.17,431.51 கோடி தேவை என்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை புணரமைக்க மொத்தம் 25,912 கோடி ரூபாய் செலவாகும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க நவம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் நிதி கோரி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ள புனரமைப்பு பணிகளுக்காக உடனடியாக 2ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் வெள்ள நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.17,431.51 தேவைப்படுவதாக இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தாக்கல் செய்யவுள்ள இரண்டாவது ஆவது அறிக்கையை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள இரண்டாவது துணை அறிக்கையில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 1ம் தேதி பெய்த கன மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகளும், வீட்டு உபயோகப் பொருட்களும், வாகனங்களும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய ரூ.25,912.45 கோடி தேவைப்படுகிறது. எனவே தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications