அந்த பெருமையை மோடியிடம் அடகு வச்சு.. ஆதீன மரபுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதீர்.. ஜோதிமணி விமர்சனம்
சென்னை: காங்கிரஸ் கட்சியையும் முன்னாள் பிரதமர் நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய மதுரை ஆதீனம் அவர்கள், இந்தியாவின் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் மோடியின் புகழ்பாடி, மனுநீதியை தூக்கிப்பிடிக்க விரும்பினால் தாராளமாகச் செய்யலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியையும், நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

300 ஆண்டுகளாக ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு, சுரண்டப்பட்டு கிடந்த இந்தியாவை, அந்த ஆட்சிக்கு அடிமை செய்து, சுதந்திரப் போரட்டத்திற்கு துரோகம் செய்த பாஜக/ மோடியின் முன்னோடிகளின் சித்தாந்தத்தால் இன்றுவரை வெறுப்பு, பிரிவினை எனும் விஷவிதைகள் விதைக்கப்பட்ட மண்ணை கட்டிகாத்த இயக்கம் காங்கிரஸ் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கென்று ஒரு மதிப்புமிகுந்த இடத்தையும், வலிமையான, வளமான இந்தியாவையும் இந்திய மக்களோடு சேர்ந்து கட்டியெழுப்பிய இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என்பதை மதுரை ஆதீனம் மறந்துவிடக்கூடாது.
சனாதன தர்மத்திற்கு எதிராக நேருவும், காங்கிரஸ் இயக்கமும் அரசியல் சாசனத்தை முன்னிறுத்தி, அந்த அரசியல் சாசனத்தின் முன் அனைவரும் சமம் எனும் சமதர்ம சமுதாயத்தைக் கனவு கண்டதாலேயே, மதுரை ஆதீனம் போன்றவர்கள் ஒரு மடாதிபதியாக இன்று அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.
தமிழ் மரபில் ஆதினங்களுக்கு என்று தனித்த அடையாளமும், மரியாதையும் உண்டு. அந்த அடையாளத்திற்கு பெருமை சேர்த்த குன்றக்குடி, பேரூர் போன்ற பல ஆதினங்கள் தமிழையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். அந்த பெருமையை நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் அடகுவைத்து தமிழ்நாட்டிற்கும், தமிழகத்தின் ஆதீன மரபிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மதுரை ஆதினம் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ஜோதிமணி கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே மாதிரி செங்கோல் நிறுவப்பட்டது. இந்த செங்கோலை நேற்றைய தினம் தமிழகத்தின் ஆதீனங்கள் டெல்லி சென்று வேத மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகளை செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுத்தனர். அதை அவர் பக்தி பரவசத்துடன் கண்ணாடி பேழையில் வைத்தார்.
இந்த நிகழ்வுகள் முடிந்த பிறகு மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறுகையில் இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை. நாங்கள் எம்.பி.யும், ஆகாமல் எந்த கட்சியிலும் சேராமல் இங்கு வந்து இருக்கிறோம். நாடாளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். ஆதீனங்களை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஓதுவார் மூர்த்திகளை தேவாரம் பாட வைத்து செங்கோலை நிறுவி இருக்கிறார்கள்.

தமிழர்களை பாதுகாத்ததற்காக நானும் ஒரு செங்கோலை கொடுத்துள்ளேன். பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகி இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கு வாழ்த்துகளையும் ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி அனைத்து ஆதீனங்களிடமும் அன்பாக நடந்து கொண்டார். மரியாதை கொடுத்தார். எல்லோரிடமும் பேச அவருக்கு நேரம் இல்லை. செங்கோல் கொடுப்பது தவறு அல்ல. அந்த காலத்தில் ராஜராஜ சோழன் செங்கோல் வைத்து இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செங்கோல் ஆதீனமே உள்ளது. அரசர்கள் வரும் போது செங்கோல் கொடுப்பது வழக்கம்தான். இதில் மன்னராட்சி, மக்களாட்சி என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தது என மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications