அமைச்சர் வீரமணியின் துணைவியார் உடல் நலக்குறைவால் காலமானார்
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் வீரமணியின் துணைவியால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
வேலூர்: தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் துணைவியார் உடல்நலக்குறைவால் புதன்கிழமை மாலை காலமானார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் கே.சி.வீரமணி. கடந்த 2006 முதல் வேலூர் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளராகவும் உள்ளார். கடந்த 1993 ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக உள்ள இவர், ஜோலார்பேட்டை கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். பி.ஏ. வரை படித்துள்ள இவர், பீடி தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வீரமணியின் துணைவி பத்மாசினி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை மாலை காலமானார். பத்மாவுக்கு ஒரு மகள் உள்ளார். வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜோலார்பேட்டையில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications