வைகோ அண்ணன், விஜயகாந்த் அண்ணன், சுதீஷ் அண்ணன்... பயங்கர சந்தோஷத்தில் கி.வீரலட்சுமி!
சென்னை: விஜயகாந்த்தை வெளியில் பார்க்கவே முடியலையே, எங்கே போனார் என்று பலரும் காத்திருக்க, அவரைப் பார்த்த சந்தோஷத்திலிருந்து இன்னும் விலகாமல் இருக்கிறார் தமிழக முன்னேற்றப்படை தலைவர் கி.வீரலட்சுமி. அதை விட பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடப் போவதை நினைத்தும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
தன் கட்சித தொண்டர்களைக் கூட பார்க்க வருவதில்லை விஜயகாந்த். இந்த நிலையில் அவர் வீரலட்சுமியிடம் பாசத்துடன் பேசினாராம். நன்கு உபசரித்தாராம். இதையும் வீரலட்சுமியே சொல்லிச சொல்லி சந்தோஷப்படுகிறார்.
சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தவர் வீரலட்சுமி. முதலில் வைகோவை மட்டுமே அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் வைகோதான், தேமுதிக அலுவலகத்திற்குக் கூட்டிப் போய் விஜயகாந்த்தையும் சந்திக்க வைத்து வீரலட்சுமியை பெருமைப்படுத்தி விட்டார்.

பயங்கர சந்தோஷம்
விஜயகாந்த்தை சந்தித்து விட்டு வந்தது குறித்து பெரும் உற்சாகம், மகிழ்ச்சியோடு காணப்படுகிறாராம் வீரலட்சுமி. தனக்கும், தனது அமைப்புக்கும் பெரிய அங்கீகாரம் இது என்றும் அவர் வருவோர் போவோரிடமெல்லாம் உற்சாகமாக கூறுகிறாராம்.

விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்
விஜயகாந்த் தன்னை நன்றாக உபசரித்ததாகவும், தன்னிடம் நன்றாகப் பேசியதாகவும், தனது போராட்டங்களைக் குறிப்பிடடுப் பாராட்டிப் பேசியதாகவும் கூறினார் வீரலட்சுமி.

வைகோ அண்ணன் சுதீஷ் அண்ணன்
வாய்க்கு வாய் வைகோ அண்ணன் புகழ் பாடுகிறார் வீரலட்சுமி. அதை விட விஜயகாந்த்தைப் பார்க்கப் போன இடத்தில் சுதீஷ் அண்ணனும் தன்னைப் பாராட்டியதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வீரலட்சுமி.

ஒரு சீட்டில் மட்டுமல்ல
தனது கட்சிக்கு ஒரு சீட் கிடைக்கும என்று கூறியுள்ள வீரலட்சுமி, ஒரு சீட்டில் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறப் பாடுபடப் போவதாக கூறியுள்ளார் வீரலட்சுமி.

முதல்வராகவும் ரெடியாம்!
எல்லோரையும் போலவே முதல்வர் ஆசை வீரலட்சுமியையும் விடவில்லை. முதல்வர் வேட்பாளராக தன்னை நிறுத்தினால் அதை தான் ஏற்றுக் கொள்வேன் என்றும் தைரியமாக கூறுகிறார் வீரலடசுமி.
பரவாயில்லையே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications