சோவிடம் நலம் விசாரித்த தி.க. தலைவர் கி.வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துக்ளக் சோவிடம் தொலைபேசி மூலம் தி.க. தலைவர் கி.வீரமணி நலம் விசாரித்துள்ளார்.

பத்திரிக்கையாளரான துக்ளக் சோ கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

K. Veeramani contacts Cho to inquire about his health

சிகிச்சைக்கு பின்பு அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சோ ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்தவர். ஆனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கி.வீரமணி கடவுள் இல்லை என்ற கருத்தை கொண்டவர். இதன் கராணமாகவே அவர்களுக்கு இடையே கடும் கருத்து யுத்தம், அரசியல் யுத்தம் நடைபெறுவது வழக்கம். ஒருவரை ஒருவரை கடும் கருத்துக்களால் தாக்கிக் கொள்வதும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோவிடம் வீரமணி தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார். இதில் உள்ளம் குளிர்ந்து போன சோ பழைய பகையை மறந்து பதில் கூறினாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+