சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரனிடம் விழுவது மேல்..! இது கலைஞர் டிவி ஸ்டைல்!!

ஆளும் கட்சியின் சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக திமுகவினர் கடந்த சில நாட்களாக குற்றம்சாட்டிவருகிறார்கள். தேனி வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம், நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா போன்றோர் பணப்பட்டுவாடாவுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா நடத்தும் அளவுக்கு சென்றனர்.
இதனிடையே தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக பொருளாளர் ஸ்டாலின், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதாகவும் அதை தடுக்குமாறும் மனு அளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சி சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் அரவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே நேற்றிரவு விடியவிடிய, மாநிலம் முழுவதிலும் பல தொகுதிகளில் சில கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா
செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை தொகுதியை பொறுத்து பண மதிப்பு மாறியதாகவும் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதால் பணம் கொடுப்போரை கூட்டமாக சென்று தடுக்கமுடியாமல் போனதாக திமுகவினர் புலம்புகிறார்கள்
இந்நிலையில்தான் இனியும் காவல்துறையை நம்பி பிரயோஜனம் இல்லை, மக்களிடமே முறையிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது திமுக. இதன் ஒருபகுதியாக, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் காலை முதல் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதற்கு எதிராக பிச்சார வாசகங்களை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
அதில், உங்கள் விலை மதிப்பில்லாத வாக்குகளை பணத்திற்கு விற்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் பணப்பட்டுவாடாவால் தேர்தல் முடிவில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் திமுக மத்தியில் பரவியுள்ளது நன்கு தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications