Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டேட் ரேங்க், டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்! என் அப்ளிகேஷன் ஏன் ரிஜெக்ட் ஆச்சு விஜய் அண்ணா! மாணவி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: 10 ஆம் வகுப்பில் மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்தும் மாணவி ஒருவருக்கு விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

நேற்று முன் தினம் இரண்டாவது முறையில் 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

actor vijay kallakurichi

21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு, ஊக்கத் தொகை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் பாஸ் கொடுத்தனர். அந்த பாஸ் இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அது போல் நிகழ்ச்சி முடியும் வரை , செல்போன், நோட்டுப் புத்தகங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவற்றை நிர்வாகிகள் வாங்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சி முடிந்து சென்ற போது திருப்பி அளித்தனர். விஜய் நிகழ்ச்சிக்கு வந்த போது தளபதி பாடல் ஒலிக்கப்பட்டது.

விஜய்க்கு மாணவர்களும் பெற்றோர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கரவொலியும் விசில் சப்தமும் அடங்கவே 15 நிமிடங்கள் ஆனது. இதையடுத்து விஜய் ஒவ்வொருத்தருக்காக பரிசு பொருட்களை அளித்தார். அதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னையை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மல் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரி தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல், காவியா ஸ்ரீ, ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவ்யா ஜனனி, நெல்லை சஞ்சனா, ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேரந்த மாணவி மாநிலத அளவில் சிறப்பிடம் பெற்று விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என அந்த மாணவியும் அவருடைய தாயும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவி கூறுகையில் நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். நான் மவுண்ட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்தேன். 497 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். பள்ளியில் முதலிடம் , மாவட்டத்திலும் முதலிடம் பெற்றேன். மாநில அளவில் 3ஆவது இடம் பெற்றுள்ளேன். தேர்வு முடிவுகள் வந்த இரு நாட்கள் கழித்து எனது தந்தைக்கு போன் வந்தது.

அதில் விஜய் விருது வழங்கும் விழாவில் உங்கள் மகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாக சொன்னார்கள். இதனால் நானும் என் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தோம். இதையடுத்து எனது மதிப்பெண் ஜெராக்ஸை எடுத்துக் கொண்டு விஜய் மக்கள் நிர்வாகி மோகனிடம் என் அப்பா கொடுத்தார்.

"விஜய்யிடம் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் உங்களுக்கு தகவல் சொல்கிறேன்" என அவர் சொன்னதால் நாங்கள் 10 நாட்கள் காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் வரவில்லை என்பதால் அந்த நிர்வாகிக்கு போன் செய்த போது "நீங்கள் ரிஜெக்ட் ஆகிவிட்டீர்கள்" என சொன்னார்கள்.

எதனால் என்னை ரிஜெக்ட் செய்தார்கள் என தெரியவில்லை . விடுபட்ட மாவட்டங்களுக்கு ஜூலை 3 ஆம் மீண்டும் விஜய் பரிசு வழங்க போகிறார். இந்த முறை உங்களை பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க விஜய் அண்ணா என அந்த மாணவி தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவியின் தாய் கூறுகையில், எனது மகனுக்கும் மகளுக்கும் விஜய் என்றால் பிடிக்கும். அவருடைய பிறந்தநாளுக்கு இவர்கள் கேக் வெட்டுவார்கள். பள்ளியில் இருந்து விஜய் சாரை பார்க்க வாய்ப்பு என சொன்னவுடன் அவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். என் மகள் மாநிலத்தில் 3ஆவது இடம் பிடித்தும் அவளது விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என தெரியவில்லை. ஜூலை 3 ஆம் தேதி எப்படியாவது நான் உங்களை பார்க்க வேண்டும் என அந்த தாயும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

கடந்த முறையே தகுதியுள்ள மாணவர்கள் சிலர் விடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்த முறை இது போன்றதொரு புகார் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+