பொங்கி வந்த காவிரி.. கல்லணையிலிருந்து நீர் திறப்பு.. விவசாயிகள் உற்சாகம் #kallanai

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Kallanai opened for Samba crops

காவிரி பாசன பகுதியில் 13 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடிக்காக கல்லணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வந்தடைந்ததால் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. விதை நெல் மற்றும் மலர்களை தூவி தமிழக அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்களும் கல்லணை நீரை வரவேற்றனர்.

தண்ணீர் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்த நீர் பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது என்பது விவசாயிகளின் கவலையாகும். 25,000 கனஅடி தண்ணீர் எடுத்தால் மட்டுமே சம்பா சாகுபடி செய்து டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேற்றப்படும் எனவும் விவசாயிகள் கூறினர்.

எனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+