For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நானும், ரஜினியும் எதிர்ப்போம்.. கமல் திடீர் பேச்சு

தமிழக மக்களை மேம்படுத்துவதற்காக எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நானும் ரஜினியும் எதிர்ப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயேந்திரருக்கு கமல் சுளீர்!- வீடியோ

    சென்னை: தமிழக மக்களை மேம்படுத்துவதற்காக எத்தனை எதிர்ப்புகளையும் சமாளிக்க நாங்கள் தயார் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    அரசியலுக்கு முதலில் வருவது யார் ரஜினியா, கமலா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வர போவதை அறிவித்தார். மேலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

    kamal hassan says to develop TN is first aim

    கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தயார் என்றும் அம்பு விடுவதுதான் பாக்கி என்றும் ரஜினி தெரிவித்திருந்தார். எனினும் இதுவரை கட்சி குறித்த எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் கமலும் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தார். மேலும் பிப் 21,22, 23 ஆகிய தேதிகளில் பொதுக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தை மேம்படுத்துவதே தமது முதல் நோக்கம். தமது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் தமிழக மக்களை மேம்படுத்துவதுதான். மக்களுக்கு துணையாக இருப்போம், எது வந்தாலும் எதிர்ப்போம் என்று கூறிய கமல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்தார்.

    English summary
    Kamal hassan says in Chennai Airport to promote the TN people's life style is mine's and Rajini's first aim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X