நாளை நமதே பதாகைகள், பறையாட்டத்துடன் களைகட்டிய கமலின் கட்சி அறிவிப்பு மாநாடு!
நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு பறையாட்டத்துடன் களைகட்டியுள்ளது.
Recommended Video

மதுரை: நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு பறையாட்டத்துடன் களைகட்டியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப் பெயரையும் சின்னத்தையும் இன்று அறிவிக்கிறார்.
இந்த மாநாட்டில் கமல் கட்சியின் கொள்கையும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

கொடி கம்பங்கள்
மாநாட்டுக்கான விழா மேடை, இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நேற்று முதலே தடல்புடலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழா மேடைக்கு செல்லும் வழி நெடுகிலும் நாளை நமதே வாசகம் பதிக்கப்பட்ட கொடிகம்பங்கள் நடப்பட்டுள்ளன.

நாளை நமதே பதாகை
மைதானத்தில் திரண்டுள்ள மக்களும் நாளை நமதே என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் சுமந்துள்ளனர். மைதானத்தில் திரண்டுள்ள பெரும்பாலான மக்களின் கைகளில் இந்த பதாகையை காண முடிகிறது.

கலை நிகழ்ச்சிகள்
மேலும் கட்சி அறிவிப்பு மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

அலைமோதும் கூட்டம்
கமலின் கட்சிப் பெயர் சின்னம், கொள்கைகளை அறியவும் அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அறியவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்தக்கடை மைதானத்தில் திரண்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications