பொய் வழக்கை எதிர்த்து கோர்ட்டில் மனு...கனகராஜ் சகோதரர் தனபால் முடிவு
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கனகராஜிற்கு தொடர்பிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்று அவரது சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.
சேலம் : கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் உள்ள பொருட்களை திருடுவதற்காக நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளைக்கு காரணமானவர்களை தனிப்படை போலீசார்தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் தான் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை பிடிக்க கேரளா மற்றும் சென்னைக்கு தனிப்படை விரைந்த நிலையில் போலீசாரிடம் சரணடைய சென்ற போது சேலம் அருகே கனகராஜ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
கனகராஜ் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அவரின் சகோதரர் தனபால், விபத்து நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் சாலை விபத்து ஏற்படுவதற்கான எந்த வாய்ப்புகளுமே இல்லை என்றார். திட்டமிட்டே கனகராஜ் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் பொய் வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாகவும் தனபால் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications