கோவில் நகரமான காஞ்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளும் பின்னணியும்!
ஆன்மீக நகரமாக காஞ்சிபுரத்தில் மீண்டும் கொலைகள் அரங்கேறிவருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் அரங்கேறியுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்மிக நகரமாக திகழும் காஞ்சிபுரம், தொடர் கொலைச் சம்பவங்களால் திகில் நகரமாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இமயம் ரவி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. தற்போது மீண்டும் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு கொலைகள்
கடந்த 5ஆம் தேதி மொட்டுக்கள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சந்திரசேகர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து 2 தினங்கள் கூட ஆகாத நிலையில் தேமுதிக நகர அவைத் தலைவர் சரவணன் தற்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சந்திசேகர் ஃபேஸ்புக் பதிவு
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சந்திரசேகர் ஃபேஸ்புக் பதிவில் பூனைக்கதை போட்டிருந்தார். அதில்,
மீயாவ்! மீயாவ்!!
சில பூனை குட்டி தன்னோட நிழலை பார்த்து தன்னை சிங்கமாக நினைத்து மற்றவர்களையும் தன்னை சிங்கம்னு சொல்லனும் சொல்லி வச்சு அப்படியே சிங்கமா வாழனும் நினைப்புல இருந்தபோது, அந்த பூனை மீது தீடீர்னு பச்சை தண்ணீரை ஊத்தின அப்போ பயத்துல கண் காணாத இடத்துல ஒடிப்போச்சு.
Moral: வெந்நீரை கண்ட பூனை பச்சை தண்ணீரை கண்டாலும் பயப்படும். இங்கு இப்படியும் சில தொடை நடுங்கி பூனைகள் .
இந்த பதிவு சிலரை கோபத்தில் ஆழ்த்தியது.
ரவுடியின் ஆடியோ
இதேபோல பிரபல ரவுடியின் ஆடியோவை கேளுங்கள் என்று ஏப்ரல் 4ஆம் தேதி பதிவிட்டிருந்தார் சந்திரசேகர். இது சிலரை உசுப்பிவிடவே அவர் 5ஆம்தேதியன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் ரவுடிகள்
காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் சமூக விரோதிகள் பலர் ஊடுருவியுள்ளனர். இதுவே காஞ்சிபுரத்தில் நடைபெறும் பல குற்ற நடவடிக்கைகளுக்கு மூலமாக அமைந்துள்ளது. அதேபோல் மதுபானக் கடைகளுக்கு அருகே உள்ள மது அருந்தும் கூடங்களை ஏலம் எடுப்பதிலும் ரவுடிகள் ஆதிக்கம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவதற்காக பல்வேறு கூலிப் படையினர் காஞ்சிபுரத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் புகாராகும்.

ரவுடி ஸ்ரீதருக்கு தொடர்பா?
இதனிடையே சந்திரசேகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கில் அவர் போட்டிருந்த பதிவு மறைமுகமாக ஸ்ரீதரை தாக்கித்தான் என்றும், அவரது அடியாளான திருப்பருத்திக் குன்றம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசனையும் மறைமுகமாக விமர்சித்ததே கொலைக்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கெட்ச் போட்டு கொலை
தாசில்தார் மகன் எல்லப்பன் கொலை வழக்கில் ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது. இதற்கு காரணம் அப்ரூவராக மாறிய தினேஷ்தான் என்கிறார்கள். ஸ்ரீதர் பற்றிய ரகசியங்கள் சந்திரசேகர் வசம் உள்ளதே இந்த கொலைக்கு காரணம் என்றும், கடந்த ஒரு மாதமாகவே ஸ்கெட்ச் போட்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சரவணன் கொலை
அடுத்த இரு தினங்களில் தேமுதிகவை சேர்ந்த சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையின் பின்னணியிலும் ரியல் எஸ்டேட் ரவுடிகள் இருப்பதாகவே குற்றம் சாட்டுகின்றனர். ரியல் எஸ்டேட் ரவுடிகளால் இன்னும் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் காஞ்சிபுரம் நகர மக்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications