ஊரெல்லாம் லீவு... எங்களுக்கு மட்டும் இல்லையே.. காஞ்சி. மாவட்ட மாணவர்கள் ஏமாற்றம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை இல்லை. காரணம் அங்கு கன மழை இல்லை. இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் பள்ளிகளுக்குச் சென்றதைக் காண முடிந்தது.
மீண்டும் ஒரு கன மழை கடலோர மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதேபோல அருகாமை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையையொட்டியுள்ள பகுதிகளிலும் இரவு வி்ட்டு விட்டு மழை பெய்து வந்தது.

இந்த மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை, திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இருப்பினும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை விடப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர் என பல பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதிலும் நள்ளிரவுக்கு மேல் சற்று கன மழையாகவும் இருந்தது.
ஆனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை இல்லை. இதனால் தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலையில் மழை சுத்தமாக நின்று போனது. வெயிலும் அடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக விடுமுறைக்கான வாய்ப்பு சுத்தமாக மறைந்து போய் விட்டது.
இதனால் அடடா வடை போச்சே என்ற கவலையுடன் மாணவச் செல்வங்கள் பள்ளிகளுக்குப் படையெடுத்ததைக் காண முடிந்தது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்










Click it and Unblock the Notifications