மது பழக்கத்தினால் இளைஞர்கள் வேலைக்கு போவது குறைந்துள்ளது - கனிமொழி குற்றச்சாட்டு
நெல்லை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் ‘பூரண மதுவிலக்கு' என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்கு தான் என கிட்டதட்ட எல்லா கட்சிகளும் கூறிவரும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் பூரண மதுவிலக்கை தங்களது தேர்தல் பிரசாரத்தில் முதன்மையாக கொண்டுள்ளன. இந்த நிலையில் ‘பூரண மதுவிலக்கு பெண்கள் சந்திப்பு'என்ற உரையாடல் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
இதில் மதுவினால் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்கள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், மாணவிகளுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உரையாடினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பாகதான் இருக்கும் என உறுதியளித்தார்.
மதுவால் சீரழிந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நெல்லையில் நடைபெற்ற விழாவில் குற்றம் சாட்டினார்.
மேலும், மது பழக்கத்தினால் இளைஞர்கள் வேலைக்கு போவது குறைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று கனிமொழி கூறினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications