நாம் தமிழர் கட்சியின் சார்பில் உத்தமபாளையத்தில் கண்ணகி பெருவிழா: சீமான் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்ணகி பெருவிழா நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
தேனி: உத்தமபாளையத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் கண்ணகி என்பதையும், 'பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!' என்ற தத்துவத்தையும் முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்று, பேருரையாற்றினார்.
விழாவில் முன்னதாக, முன்னதாக பறையிசை, மள்ளர் கம்பம், கருப்பு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், தமிழகம் முழுவதிலுமிருந்து நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளும், கட்சி பாசறைகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications