நாகர்கோவில்- பெங்களுர் தினசரி ரயிலை உடனே இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
கன்னியாகுமரி: நாகர்கோவில் - பெங்களுர் தினசரி ரயிலை உடனே இயக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, குமரி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கூறியுள்ளதாவது:
குமரி மாவட்டத்திலிருந்து பெங்களுர் மற்றும் ஓசூருக்கு மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
கடந்த 15 வருடங்களாக இந்த வழி தடத்தில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த பகுதி பயணிகளின் கோரிக்கை ஆகும். பல ஆண்டு கடுமையான போராட்டத்துக்கு பின் குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வேதுறை 2010 ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நாகர்கோவில் - பெங்களுர் வழி தடத்தில் வராந்திர ரயில் மதுரை, ஈரோடு, ஓசூர் வழியாக வாராந்திர அறிவித்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பகல் நேர ரயிலாக இயங்கும் படியாக கால அட்டவணை அமைத்து இயக்குவதால் பெங்களுருக்கு செல்ல இந்த ரயிலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு சொல்லும் படியான எந்த பயனும் இல்லை.
இந்த ஆண்டு 2013-ம் ரயில் பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் பன்சால் அவர்களால் நாகர்கோவில் - பெங்களுர் வழித்தடத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து ஜுலை மாதம் வெளியிடப்பட்ட ரயில்கால அட்டவணையில் இந்த தினசரி ரயில் இயங்கும் காலஅட்டவணை வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த ரயில்களில் சென்னை - மானாமதுரை ரயில், சென்னை - வேளங்கண்ணி லிங் ரயில் , கோயம்பத்தூர் - மன்னார்குடி தினசரி ரயில், புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில் ஆகிய ரயில்கள் முதலில் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் அந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகளில் நிர்பந்தத்தின் அல்லது நெருக்கடி காரணமாக உடனடியாக இயக்கப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவித்த மற்ற ரயில்களில் சென்னை - பழநி, சென்னை -தஞ்சாவூர், கோவை -ராமேஸ்வரம் போன்ற ரயில்களும் படிப்படியாக இயக்கப்பட்டு விட்டது.
ஆனால், தென்தமிழ்நாட்டு பயணிகளுக்கு அதிக அளவு உபயோகப்படுத்தும் இந்த பெங்களுர் தினசரி ரயில் இதுவரையிலும் இயக்கப்படவில்லை, மற்ற ரயில்கள் இயக்கியது போன்று இந்த ரயிலையும் உடனடியாக இயக்க வேண்டும் என்று தென்தமிழக பயணிகள் எதிர்பார்க்கின்றனர் என கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications