சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க உறுதி ஏற்போம்.. காரைக்குடி கருத்ததரங்கில் முழக்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சீமை கருவேல மரம் ஒழிப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

காரைக்குடி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். சண்முகக்கனி தலைமையேற்றார். காரைக்குடி வட்டாட்சியர் எம். கண்ணன் மற்றும் காரைக்குடி நகராட்சி ஆணையாளர் பி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திர மோகன் மற்றும் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பேரரசிரியர் பாகை கண்ணதாசன் சிறப்புரை ஆற்றினார்கள்.

அவர்கள் தனது உரையில், சீமை கருவேல மரங்கள் நீர் வளத்தை உறிஞ்சி, நம் வாழ்வாதாரத்தை ஒழிக்கக் கூடியது என்றும், ஒரு கருவேலக்கட்டை எரிவதால் ஏற்படும் புகை, பதினாறு சிகரட் பிடித்தலுக்கு சமம் என்றும், அதனால் புற்றுநோய் ஏற்ப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

நீதிபதி தனது தலைமை உரையில், மாணவர்கள் அனைவரும் கருவேல மரங்களை ஒழிக்க உறுதி மொழியேற்க வேண்டும் என்றார். அதிக கருவேலமரங்களை அழிக்கும் மாணவர்களுக்கு அகரம் அரிமா சங்கத்தின் சார்பாக பரிசு வழங்கப்படும் என்று வட்ட்டரத் தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில் தேசிய அறிவியல் தினத்தை நினைவு கூறும் வகையில் மாணவர்களுக்கு, அறிவியல் அறிஞர் சர்.சிவி. ராமன் பற்றியும், அவரின் சிறந்த கண்டுபிடிப்பான இராமன் விளைவு பற்றியும் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திர மோகன், மாணவர்களுக்கு விளக்கினார்.

பள்ளியில், அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் மாணவர்கள் செல்வன். ஹரிஷ்மாறன், செல்வன். ஆரோக்கிய கிறிஸ்டோபர், செல்வி. சபானா ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் ஆர்.எம். அருண் சுவாமிநாதன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி செய்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications