அதிமுக எம்பி அன்வர்ராஜா மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு... காரைக்குடி போலீஸ் நடவடிக்கை!
அதிமுக எம்பி அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி மீது காரைக்குடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Recommended Video

காரைக்குடி : அதிமுக எம்பி அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி மீது காரைக்குடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, ரூ. 50 லட்சம் பணம் பறித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததால் ரொபினா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மகன் நாசர் அலி இவர் மீது சென்னை தனியார் வானொலி தொகுப்பாளர் ரொபினா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில் நாசர் அலியும் தானும் கடந்த 2015ம் நாசர் அலி எனக்கு நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானார்.
நாசர் தனக்கு ஊடகத் தொழிலில் விருப்பம் இருப்பதாக கூறியதால் அதே துறையில் இருக்கும் எனக்கும் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இருவரின் மனம் ஒத்துபோனது. சென்னை சைதாப்பேட்டை, விக்னேஷ் அடுக்ககத்தில் எனது அலுவலகம் உள்ளது. தொழில் நிமித்தமாக நாசர் அலி என்னை சந்தித்து செல்வார்.

ரூ. 50 லட்சம் கொடுத்த ரொபினா
திடீரென நாசர் அலி என்னிடம் பணம் கேட்டார், அவர்மீது இருந்த அன்பின் காரணமாக பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து 30 லட்சம் ரூபாயும், உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளேன். இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்திவந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அவரது போக்கில் மாற்றம் தெரியவந்தது.

தகாத வார்த்தைகளில் திட்டிய நாசர்
இவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. நான் அதை பற்றி கேட்டபோது இதை கேட்பதற்கு உரிமையில்லை என்று என்னையும் எனது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளில் பேசினார். இந்நிலையில் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் எனது வீட்டிற்கு வருவதை குறைத்து கொண்டார்.

ரொபினாவுக்கு கொலை மிரட்டல்
நாசரின் தந்தை அன்வர் ராஜா எம்.பியிடமும் இது குறித்து முறையிட்டேன். ஆனால் என்னை ஒதுக்கியதோடு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாசரை தொந்தரவு செய்யக் கூடாது என்று தேவா என்பவர் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ரொபினா புகார் மனுவில் கூறி இருந்தார்.

4 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்நிலையில் காரைக்குடியில் வைத்து நாசர் அலிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ரொபினா அங்கும் சென்றுள்ளார். ஜமாத்தார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். காரைக்குடி போலீசாரிடமும் ரொபினா புகார் அளித்துள்ளார். இதனால் காரைக்குடி வடக்கு போலீசார் நாசர் அலி மீது பெண்ணின் வன்கொடுமை செய்தல், பணத்தை ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications