அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் சாப்பிட்டேன்.. பேஷ் பேஷ்... சொல்வது கர்நாடக அமைச்சர்!
சென்னை: அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் சாப்பிட்டேன், ரொம்ப டேஸ்ட்டாகவும், போதுமான அளவும் இருந்தது என பாராட்டியுள்ளார் கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார்.
முந்தைய கால காங்கிரஸ் அரசுகளிலும் சிவகுமார் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பதால் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் புள்ளி அவர்.

தொழிலதிபர்
பெங்களூர் அடுத்த கனகபுரா பகுதியை சேர்ந்த சிவகுமார் பெரும் தொழிலதிபரும் ஆவார். கிரானைட் தொழில், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

அதிரடி பாணி
தமிழகத்தை போலன்றி, கர்நாடகாவில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் படாடோபம் இன்றியே அரசியல் நடத்துபவர்கள். இதற்கு காரணம், இங்கு தேசிய அரசியல் கோலோச்சி இருப்பது. ஆனால் சிவகுமார் மட்டும் தமிழக அரசியல் தலைவர்கள் பாணியில் அரசியல் நடத்துபவர்.

சோனியா செல்லப்பிள்ளை
சித்தராமையா தலைமையில் அரசு அமைந்ததும், சிவகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்க அவர் மறுத்துவிட்டார். ஊழல் புகார் இருப்பதால் அமைச்சர் பதவி தர முடியாது என சித்தராமையா பிடிவாதம் காட்டினார். ஆனால் சோனியாவை டெல்லியில் சிவகுமார் சந்தித்து பேசிய சில நாட்களிலேயே அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் முதல்வரான, சித்தராமையா.

அம்மா உணவகத்தில் சாப்பாடு
இப்படியெல்லாம், செல்வாக்கும், படாடோபமும் கொண்ட சிவகுமார், சென்னை அருகே அம்மா உணவகத்தில் வந்து 5 ரூபாய்க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

போரூரில் பொங்கல்
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட ராஜிவ்காந்தி ஜோதி யாத்திரை பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவிடத்திற்கு சென்றது. அப்போது அதனுடன் வந்த சிவகுமார், போரூரிலுள்ள அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

சுவை, திடம்
சாப்பிட்ட பிறகு அதுகுறித்து சோஷியல் மீடியாவில் கருத்தும் கூறியுள்ளார் சிவகுமார். அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 5 ரூபாய் பொங்கல், சுவையானதாகவும், போதிய அளவுக்கு இருந்ததாகவும் புகழாரம் சூட்டி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சிவகுமார்.

ஜெயலலிதா ஆதரவாளர்
சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்த பிறகு, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது, மேல்முறையீடு செய்ய கூடாது என பகிரங்கமாகவே கூறியவர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications