கார்த்தி சிதம்பரம் கைது- ஐஎன்எஸ் வழக்கில் சென்னை விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது
கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது.
Recommended Video

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்தது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கார்த்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கார்த்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

சென்னை திரும்பினார்
இதைத் தொடர்ந்து கார்த்தி வெளிநாடு செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் இன்று காலை சென்னை திரும்பினார்.

ஆடிட்டர் கைது
அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விவகாரத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமீன் ரத்து
முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக கோரி ஏற்கெனவே கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில் தற்போது திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications