கருணாநிதியின் வேன் பிரசாரங்கள் ரத்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இனி வேன் மூலம் பிரசாரம் செய்ய மாட்டார் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மாறாக, பொதுக் கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு பேசி வாக்கு சேகரிக்கவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது வயதையும், உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் வேன் மூலமும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்து வருகிறார். மக்களை நேரில் சந்தித்து உருக்கமாகவும் பேசி வருகிறார்.

இதுவரை புதுச்சேரி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் கருணாநிதி பிரசாரம் செய்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அவர் வேன் மூலம் பிரசாரம் செய்ய மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பொதுக்கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு பேசுவார்.
திருத்தியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி மே 3ல் மதுரையிலும், 5ம் தேதி சென்னையிலும், 8ம் தேதி சென்னை தங்கச்சாலையிலும், 11ம் தேதி திருவாரூரிலும், 14ம் தேதி சென்னை சேப்பாக்கத்திலும் திமுக தலைவர் கருணாநிதி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications