என்னை புன்னகையோடு வரவேற்ற திருச்சி சிவாவின் மனைவி இன்று இல்லையே: கருணாநிதி இரங்கல்
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இல்லத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு நான் சென்றபோது புன்னகையோடு என்னை வரவேற்று மகிழ்ந்தவர் இன்று நம்மிடையே இல்லை என்று திருச்சி சிவாவின் மனைவி மரணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் துணைவியார் தேவிகா ராணி நேற்று நள்ளிரவு மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கடந்த சில மாதங்களாக நோயினால் தாக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், கடந்த வாரம் மருத்துவர்களும் கைவிட்டு, வீட்டிற்கு அழைத்துச் செல்ல பணித்தபோது என்னிடம் கண்ணீர் ததும்ப வந்து அந்த செய்தியினை தெரிவித்தார். மேலும் ஒரு சில மாதங்களாவது அவர் உடல் நலத்தோடு இருப்பார் என்று எண்ணியதற்கு மாறாக அவர் மறைந்து விட்ட செய்திதான் கிடைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இல்லத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு நான் சென்றபோது புன்னகையோடு என்னை வரவேற்று மகிழ்ந்தவர் இன்று நம்மிடையே இல்லை. அவரை இழந்துவாடும் சிவாவிற்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications