48 ஆண்டுகளில் முதன் முறையாக அண்ணா நினைவிடம் வராத கருணாநிதி!
அண்ணாவின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதும், நினைவு நாளில் நினைவிடத்திற்கு பேரணியாக வந்து மலர்வளையம் வைப்பதும் கருணாநிதியின் வாடிக்கையான நிகழ்வு. 48 ஆண்டுகளில் முதன் முறையாக அண்ணா நினைவிடத
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அண்ணாவின் நினைவிடத்திற்கு வந்து இன்று அஞ்சலி செலுத்தவில்லை. அண்ணா மறைந்து 48 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த ஆண்டுதான் கருணாநிதியால் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எழுத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும் தமிழர்களின் இதயங்களை கொள்ளைகொண்ட, மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து, பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைதிப் பேரணியின் முடிவில், மெரீனாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
|
அண்ணா பிறந்தநாள்
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் 108வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார் கருணாநிதி. அவரது உருவச்சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்த படங்களை உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் கருணாநிதி.
|
பெரியாருக்கு மரியாதை
பெரியாரின் பிறந்தநாளன்றும் நேரில் வந்து அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வயதானாலும் தினசரியும் கடிதம் எழுதுவார், அறிக்கை வெளியிடுவார்.

3 மாதங்களாக சிக்கல்
கருணாநிதிக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இது தீவிரமடைந்துவிட்டது.

அண்ணா நினைவுநாள்
ஆண்டு தோறும் அண்ணா நினைவு நாளில் பேரணியாக வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் கருணாநிதி. கடந்த ஆண்டு வரை அவரது நினைவிடத்திற்கு வந்த கருணாநிதி, இந்த ஆண்டு வர இயலாத நிலையில் இருக்கிறார். உடல் நல பாதிப்பு காரணமாக அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் என்று கோபாலபுரம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications