ஜனநாயகத்தின் தந்தை கருணாநிதி.. ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பாராட்டு
ஜனநாயகத்தின் தந்தை கருணாநிதி என்று ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜனநாயகத்தின் தந்தை கருணாநிதி என்று ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பேசியுள்ளார்.
சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருவமான கருணாநிதிக்கு தற்போது நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது.

இதற்கு கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். இதில் கலந்து கொண்டு ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசினார்.
அதில், ஜனநாயகத்தின் தந்தை கருணாநிதி. அனைவரையும் சமமாக மதித்தவர் கருணாநிதி. கருணாநிதியின் பண்புகளை ஸ்டாலினும் பின்பற்றுவார் என நம்புகிறேன்.
நாடு மாபெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது. நமது முன்னோர்கள் கனவ கண்ட இந்தியாவாக இன்றைய இந்தியா இல்லை. ஜாதி, மதத்தால் நாடு பிளவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாடு மாபெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது. நமது முன்னோர்கள் கனவ கண்ட இந்தியாவாக இன்றைய இந்தியா இல்லை. ஜாதி, மதத்தால் நாடு பிளவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டைக் காக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். எங்குமே இன்று அதிகாரம் இல்லை, ஏழைகள் அதிகரித்து விட்டனர். உலகிலேயே அதிக ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர். நாடெங்கும் துயரங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன.
ஆனால் பாஜகவினரோ அடுத்த ஆண்டே இந்தியா பொருளாதார வல்லரசாகப் போவதாக கூறுகின்றனர்.நாட்டில் நடக்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும். ஸ்டாலினுக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது.மாபெரும் சீரழிவுக்குப் பின்னர்தான் ஹிட்லர் சகாப்தம் முடிந்தது.
ஆனால் இன்று அதுவரை காத்திருக்க முடியாது இந்த மாபெரும் மனிதர் காட்டிய வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்கும், மொழியைக் கற்றுக் கொள்ளும் தன்மையை அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மக்கள் தினந்தோறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பிரிந்து போக விரும்புபவர்களை போக விட்டு விடுங்கள்.இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து இருக்கட்டும். இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். தினந்தோறும் ஏதாவது நடக்குமா என்று அஞ்சி வாழ முடியாது, என்று பரூக் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications