இலங்கைக்கு வழங்கிய போர்க் கப்பலை இந்திய அரசே! திரும்பப் பெறுக: கருணாநிதி
சென்னை: இலங்கைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு #DMK சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு,
Read: http://t.co/W8fzk4GMps
— KalaignarKarunanidhi (@kalaignar89) August 31, 2015 இலங்கை அரசு அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டே வருகிறது.
அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் இந்திய அரசு இது போல் தான் பயிற்சி கொடுத்தது.
அந்த வரிசையில் தற்போது போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications