திருச்சி மாநாட்டுக்கு ரயிலில் அல்ல சாலை வழியாக செல்கிறார் கருணாநிதி
சென்னை: திருச்சி மாநில மாநாட்டுக்கு சாலை வழியாக செல்ல அக்கட்சி தலைவர் கருணாநிதி விரும்புகிறார்.
திமுகவின் 10வது மாநில மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திமுக தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கூட்டணி தலைவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

தொலை தூர நகர்களில் நடக்கும் கட்சி கூட்டங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாக ரயிலில் செல்வார். ஆனால் திருச்சி மாநாட்டுக்கு சாலை வழியாக செல்வேன் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்களோ உங்களின் உடல் நிலையை மனதில் வைத்தாவது ரயிலில் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
கருணாநிதியோ தான் சாலை வழியாகத் தான் செல்வேன் என்று மீண்டும் தெரிவித்ததால் குடும்பத்தினர் அவரது விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அவர் செல்லும் வழியை அவரது தனிபாதுகாவலர் பாண்டியன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு செய்தது.
கருணாநிதியுடன் சிறப்பு மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தார் சிலரும் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications