For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சச்சின் சரிதையை விறுவிறுப்பாக படித்து வரும் கருணாநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலை திமுக தலைவர் கருணாநிதி படிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையை வெளியிட்டார். வெளியீட்டுக்கு முன்பே அது பெரும் பரபரப்பைக் கூட்டியது. காரணம், அந்த நூலில் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலை சச்சின் வறுத்து எடுத்திருந்ததுதான்.

போகிற போக்கில் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கித் தந்த கபில்தேவையும் சரி பயிற்சியாளர் வேலையா சரியாக செய்யாதவர் கபில் என்றும் கூறி விமர்சித்திருந்தார் சச்சின்.

கருணாநிதி கையில்

கருணாநிதி கையில்

தற்போது சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்துள்ளார் கருணாநிதி.

பேஸ்புக்கில் போட்டோவுடன்

பேஸ்புக்கில் போட்டோவுடன்

இதுதொடர்பாக கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் போட்டோவுடன் அப்டேட் போடப்பட்டுள்ளது.

புத்தகமும் கையுமாக

புத்தகமும் கையுமாக

கருணாநிதி சச்சின் டெண்டுல்கரின் Playing it my way நூலைக் கையில் வைத்து அதைக் கருணாநிதி படிப்பது போல அதில் உள்ளது.

தலைசிறந்த வீரர்

தலைசிறந்த வீரர்

அதில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் Sachin Tendulkar, அண்மையில் எழுதி வெளியிட்ட, அவரது சுயசரிதை நூலான ‘'பிளேயிங் இட் மை வே'' #Playingitmyway கிடைக்கப்பெற்றேன்.

அமைதியின் உருவமாய்

அமைதியின் உருவமாய்

கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்த போதும் அமைதியின் உருவமாய், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி - அடக்கத்துடன் அவர் பதிலளிக்கும் பாங்கும் அந்தப் பண்பாடும்கூட, அவர் பெரும் புகழ்பெறக் காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல, எந்நாளிலும் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சச்சினின் - சுயசரிதை நூலை ஆர்வத்துடன் படித்து வருகிறேன் என்று அதில் கருணாநிதியின் கருத்தும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட் விசிறி

கிரிக்கெட் விசிறி

கருணாநிதி ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர் என்பது நினைவிருக்கலாம். முன்பெல்லாம் சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது மறக்காமல் போய் பார்த்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK president Karunanidhi has started to read former cricketer Sachin's autobiography.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X