கருணாநிதி 92…. பிறந்தநாளுக்கு தயாராகும் பிரம்மாண்ட மேடை!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை தயாராகி வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதிக்காக வண்ணமயமான மேடை விறுவிறுப்பாக தயாராகிவருகிறது.

ஜூன் 3-ம் தேதி தனது 92-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், 7.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

காலை 9 மணி முதல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம், கருத்தரங்கம், உதவிப்பொருள்கள் வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிறந்தநாள் தினத்தன்று மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங் கேற்கிறார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மிகப்பெரிய திட்டத்தை கருணாநிதி வைத்துள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications