இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், இன்னும் எத்தனை காலம் தான் இலங்கைக் கடற்படையினரைக் கண்டு அஞ்சி அஞ்சி சாக வேண்டுமோ? தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதும், அச்சுறுத்துவதும், கைது செய்வதும் என்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கை தொடர் கதையாகவே நீண்டு வருகிறது.

karunanidhi statement about fishermen arrest

இதுபற்றி, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவது தான் தாமதம், அடுத்த நாளே பிரதமருக்கு நமது முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியதாக ஏடுகளுக்கெல்லாம் செய்தி கொடுத்து விடுவார்கள். ஆனால் கடிதத்தால் மீனவர்களின் துயரம் களையப்படுகிறதா என்ன? மத்திய அரசுக்கோ, பிரதமருக்கோ வெறும் கடிதம் மாத்திரம் இவ்வாறு எழுதி விட்டால் போதுமா? முதல் அமைச்சரோ, மூத்த அமைச்சர்களோ, துறையின் அமைச்சரோ, டெல்லி சென்று இது பற்றி முறையிட வேண்டாமா?

37 எம்.பி.க்கள் இருப்பதால், அ.தி.மு.க. வின் உதவி பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படும் நிலையில், மீனவர் நலனுக்காக, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டியது தானே? வெறும் கடிதத்தின் மூலமாக தமிழ் நாட்டு மீனவர்களை தமிழக அதிமுக அரசு எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது?

இந்தியாவோடு ஒப்பிடும்போது இலங்கை எவ்வளவு சிறிய நாடு? இருந்தாலும் அந்த நாட்டின் கடற்படையினர் செய்யும் அட்டூழியத்திற்கு பெரிய நாடான இந்தியா ஒரு முடிவு கட்ட வேண்டாமா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா? கூட்டம் நடத்துகிறோம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், மீனவர் வாழ்க்கை என்ன ஆவது?

தமிழக மீனவர்கள் 28 பேரை நான்கு படகுகளோடு இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடந்த 12ஆம் தேதி 23 மீனவர்கள் இதே இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டாமா? மத்திய அரசு இனியும் இதுவரை தாமதித்து வந்ததைப் போல, தாமதிக்காமல் உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண உளப் பூர்வமமாக உண்மையான முயற்சி எடுக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+