ISRO Job: இஸ்ரோவில் வேலை.. மாதம் 69 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு (ISRO Job) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் ISTRAC மையத்தில் டெக்னீஷியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லைப்ரரி அசிஸ்டென்ட் உள்ளிட்ட 26 நிரந்தர பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.21,700 - ரூ.69,100-வரை வழங்கப்படும்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது 26 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ISRO Job 2026 Apply Online for 26 Technician Technical Assistant amp amp Scientific Assistant Posts

பணியிடங்கள் விவரம்:

* டெக்னீஷியன்-பி (எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்) - 8 காலியிடங்கள்
* டெக்னீஷியன்-பி (தச்சர்) - 1
* டிராஃப்ட்ஸ்மேன் - பி (சிவில்) - 1
* டிராஃப்ட்ஸ்மேன் - பி (மெக்கானிக்கல்) - 1

* தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரானிக்ஸ்) - 6
* தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்) - 1
* அறிவியல் உதவியாளர் (கணினி அறிவியல்) - 4
* அறிவியல் உதவியாளர் (கணிதம்) (பணியிட குறியீடு: 008) - 1
* நூலக உதவியாளர் - 'ஏ' - 1
* சமையலர் - 'ஏ' - 1

கல்வித் தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு:

* சயிண்டிபிக் உதவியாளர் பணிக்கு மத்திய அரசின் ஊதிய விகிதம் லெவல் 7 படி சம்பளம் வழங்கப்படும். ரூ.44,900 - ரூ.1,42,400 வரை வழங்கப்படும்.
* டெக்னீஷியன்-பி (எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்) பணியிடங்களுக்கு ரூ.21,700 - ரூ.69,100-வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வரும் 20.07.2026 - கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.isro.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+