பிறந்த நாளில் என்னை வாழ்த்திய 14,48,683 பேர்!- கருணாநிதி
சென்னை: என்னுடைய பிறந்த நாளில் குறுஞ்செய்தி - சமூக வலைதளம் - இணையதளம் மூலம் 14,48,683 பேர் வாழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி, என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த ஜூன்-3 அன்று எனது 91ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு, உலகமெங்கிலும் உள்ள கழகத்தினர், உடன்பிறப்புகள், பொதுமக்கள் என 14,48,683 பேர், என்னிடம் கொண்டுள்ள பாசத்தின் - அன்பின் காரணமாக குறுஞ்செய்தி வாயிலாகவும், முகநூல், டிவிட்டர் மற்றும் இணைய தளத்தின் வாயிலாகவும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்.

ஏற்கனவே கடந்த 1-6-2014 அன்று "நான் வழங்கும் பிறந்தநாள் செய்தி" எனும் தலைப்பில் உடன்பிறப்புக்கான கடிதத்தில் "என்னைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களிடம் பெற்ற பயிற்சியைக் கருத்தில் தேக்கி, அறிஞர் அண்ணா அவர்கள் கற்றுத் தந்த வழிமுறை களிலிருந்து கிஞ்சிற்றும் பிறழாமல்; சுயமரியாதையும், பகுத்தறிவும் பெற்ற சாதிமதப் பேதமற்றதும், சோஷலிச அடிப்படையில் ஆனதுமான சமுதாயம் - சமத்துவம் - சமூக நீதி - தமிழ் மொழியின் முதன்மை - தமிழர் மேம்பாடு என; இவற்றுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவன்; தோல்வியாயினும், வெற்றியாயினும் துவளாமல் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான்.
"அடித்தாலும், அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை" என்பதற் கொப்ப, எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை; தமிழ் மக்களிடமிருந்து என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளபடி; தங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் எனக்கு மக்கள் பணியை ஊக்குவிப்பதாகவும்; மென்மேலும் பணியாற்றிட தூண்டுகோலாகவும் உள்ளது என்பதை தெரிவித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications