எங்கே போனார் அழகிரி?.. அவரை சந்திக்க வேண்டும்.. திமுகவினரிடம் விசாரித்த மோடி
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் மு.க அழகிரி இல்லாததை அடுத்து, அழகிரி எங்கே என்று திமுகவினரிடம் பிரதமர் மோடி விசாரித்து இருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் மு.க அழகிரி இல்லாததை அடுத்து, அழகிரி எங்கே என்று திமுகவினரிடம் பிரதமர் மோடி விசாரித்து இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது.
காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மோடி வந்தார்
இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன் பிரதமர் மோடி கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வந்தார். சில நிமிடம் அங்கே இருந்தவர் அஞ்சலி செலுத்திவிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக கிளம்பினார்.

அழகிரி இல்லை
ஆனால் மோடி அங்கே வந்த போது, அந்த பகுதியில் அழகிரி இல்லை. அவர் அரங்கிற்கு பின் பகுதியில் உட்கார்ந்து இருந்தார். பல நாள் களைப்பு காரணமாகவும், உடல் ஒத்துழைக்காத காரணத்தாலும், அவர் பின்பக்கம் அமர்ந்து இருந்தார். அழகிரிக்கு திடீர் என்று உடலில் சிறிய பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விருப்பம்
இந்த நிலையில் மோடி திமுகவினரிடம் அழகிரி எங்கே சென்றார் என்று கேட்டு இருக்கிறார். அவரை சந்திக்க வேண்டும் தெரிவித்துள்ளார். அவர் பின்பக்கம் இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது அழகிரி பின்பக்கம் கண்ணீருடன் உட்கார்ந்து இருந்துள்ளார்.

முடியவில்லை
ஆனால் மக்கள் கூட்டத்தை மீறி பின்பக்கம் செல்ல முடியாது. அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் இருந்தனர். அதேபோல் சரியான அளவில் அங்கு தடுப்பு கேட்டுகளும் இல்லை. அங்கு செல்வது மோடிக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதால் அவரால் அழகிரியை சந்திக்க முடியவில்லை.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications