'அமராவதி' நிச்சயம் சாதனை படைக்கும்... சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி, நிச்சயம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, தெலுங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும், அடுத்த 10 வருடங்களுக்கு பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அமராவதி நகருக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளும்படி, திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
இதற்கு பதலளித்து சந்திரபாபு நாயுடுவுக்கு, கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தாங்கள் முதலமைச்சர் ஆகி இருக்கும் புதிய ஆந்திர பிரதேச மாநிலத்தின் மக்கள் தலைநகராகும் அமராவதி நகரின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தாங்கள் அனுப்பிய அழைப்பிதழ் கிடைக்க பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அது தங்களின் கனவு நகரமாக உருவாக உள்ளது.
உங்களின் கனவுகள் மிகவும் சிறப்புமிக்க திறன் கொண்டவை. அமராவதி நகரம் நிச்சயம் மிகப்பெரிய சாதனை படைக்கும். அனைத்து தகுதி உடைய இந்நகரத்தை பிரதமர் நரேந்திரமோடி 22-ந் தேதி அடிக்கல் நாட்ட இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த விழா வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் ஆந்திர பிரதேச மக்கள் வாழ்வில் மேன்மேலும் முன்னேற்றம் அடைவார்கள்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications