நான் இப்பத்தான் எம்எல்ஏ ஆகியிருக்கேன்... ஆட்சியை கலைச்சிராதீங்க- கருணாஸ் கெஞ்சல்
ஜெயலலிதா ஆசியுடன் தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும் என்று திருவாடனை எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை: நான் இப்போதுதான் முதன் முறையாக எம்எல்ஏவாகியுள்ளேன். நான்காண்டு காலம் ஆட்சி நீடித்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும், அதற்காகவாவது ஆட்சி நீடிக்க வேண்டும் என்று கருணா
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மதுரை, தேனி உட்பட 10 மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.எல்.ஏக்கள், நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களும் முதல்வருடன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் எம்எல்ஏ, அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்றார்.
எம்எல்ஏக்கள் எங்கு அதிகம் இருக்கிறார்களோ தான் அங்கே இருப்பேன் என்று கூறினார். ஜெயலலிதா ஆசியுடன் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தினகரனை எம்எல்ஏக்கள் சந்திப்பதன் மூலம் ஆட்சி கவிழப்போவதில்லை என்று கூறிய கருணாஸ், தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக முதல்வருடன் பேசி வருவதாக கூறினார்.
இதேபோல தினகரனை சந்திப்பவர்கள் எல்லாம் அவரது ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று எழுதுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றார்.
முதன் முதலாக எம்எல்ஏவாகியுள்ளேன். இந்த ஆட்சி நீடித்தால் மட்டுமே என்னைப் போன்றவர்கள் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதற்காகவாவது இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் கருணாஸ் எம்எல்ஏ கூறினார்.












Click it and Unblock the Notifications