தீக்குளித்து ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கட்டிப்பிடிப்பேன்.. அதிமுக எம்.எல்.ஏவின் அதிரடி எச்சரிக்கை
கரூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் இனியும் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு நானே தீயிட்டு யார் சொன்னார்களோ அவர்களை கட்டிப்பிடித்து எனது எதிர்ப்பை காண்பிப்பேன் என்று ஜெயலலிதா பேரவையின் கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏவுமான எஸ்.காமராஜ் எச்சரித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து தமிழகம் முழுவதும். அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜகவினரும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்
இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கிருஷ்ணராயபுரம் சட்டசபை உறுப்பினா் காமராஜ் தலைமையில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு இளங்கோவனை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

பாடையில் உருவபொம்மையை தூக்கி வந்து
பின்னர் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவபொம்மையை பாடை கட்டி நடுரோட்டில் வைத்து தீ வைத்து கொளுத்தினா். பின்னர் துடைப்பக் கட்டையால் அடித்தனர்.

ஏகப்பட்ட பேர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான வடிவேல், மாவட்ட கவுன்சிலா் கண்ணதாசன், அண்ணா தொழிற்சங்கம் பொரணி கணேசன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியகுழுத்தலைவா் முத்துசாமி, கிருஷ்ணராயபுரம் நகர கழக செயலாளா் தங்கதுரை, இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், பிரபாகா், அம்மா பேரவை ஒன்றிய செயலாளா் வீரமணி, கூட்டுறவு சங்க தலைவா் செல்வமணி, தொகுதி இணை செயலாளா் வமு மதியழகன், பேரூர் கழக நிர்வாகிகள் வெங்கடாசலம், பால்ராஜ், கவுன்சிலா் தா்மன் உள்ளிட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், கட்சி தொண்டா்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

காமராஜ் விடுத்த எச்சரிக்கை
இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் செய்திருந்தார். அவர் போராட்டத்தின்போது கூறுகையில், தமிழக நிரந்தர முதல்வரும், அ.தி.மு.க வின் நிரந்தர பொதுச்செயலாளருமான அம்மாவைப் பற்றி யார் தவறாக பேசினாலும் இனி உருவ பொம்மை கிடையாது, நானே என்னை கொளுத்திக் கொண்டு சொன்னவர்களைக் கட்டி பிடித்து கொள்வேன். இது போல் நடந்தால் தான் அவர்களுக்குப் புத்தி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications