பெண் தேடும் பசங்க தான் டார்கெட்.. கல்யாணம் ஆனதும் நகையோடு எஸ்கேப்.. கரூரில் தரகர்களோடு சிக்கிய லேடி

Subscribe to Oneindia Tamil

கரூர்: திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து பெண் ஒருவர் தரகர்களோடு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புகாரின் பேரில் அந்த கும்பலை கரூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக வித விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவாங்க என்று நினைத்துப் பார்க்கும் அளவிற்கான மோசடி சம்பவங்களும் கூட அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் தான் திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.

Karur woman arrested for cheating men after getting married

பாக்யராஜ் நடித்த சின்ன வீடு படத்தில் பாக்யராஜை மயக்கி ஒரு பாட்டியும் இளம்பெண்ணும் ஏமாற்றுவார்களே அதேபோன்ற ஒரு மோசடிதான் கரூரிலும் நடைபெற்று இருக்கிறது. இந்த அதிர்ச்சிகர மோசடி சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கரூரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் திருமண வரன் பார்த்துக் கொண்டு இருந்தார். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நல்ல திருமண வரன் இருந்தால் என சொல்லி பார்த்துக் கொண்டு இருந்ததோடு திருமண புரோக்கர்களிடம் தனக்கு நல்ல ஒரு மணப்பெண்ணை பார்க்குமாறு சொல்லியிருக்கிறார். அப்போதுதான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் அமிர்தவல்லி ஆகியோர் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள்.

அவர்களும் தங்களுக்கு தெரிந்த பெண் ஒருவர் தேனியில் இருப்பதாகவும் பெற்றோர் இல்லாமல் தனியாக வசித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதையும் நம்பிய விக்னேஷ்வரன், தேவி என்ற அந்தப் பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் மணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த கையோடு, விருதுநகரில் தனது உறவினர் வசிப்பதாகவும் அவரது வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று விக்னேஷ்வரனிடம் தேவி கூறியிருக்கிறார்.

விக்னேஷ்வரனும் தேவியை விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் விக்னேஷ்வரனை வீட்டில் இருங்கள் என்று சொல்லிய தேவியும் அவரது உறவுக்கார பெண்ணும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன் பின் திரும்பவே இல்லை. இருவரையும் காணாததால் பதறிப்போன விக்னேஷ்வரன் பல இடங்களில் தேடி அலைந்துள்ளார்.

கடைசியாக கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில், நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்து இருக்கிறார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது , விக்னேஷ்வரனை திருமணம் செய்த பெண் தமிழகம் முழுவதும் இதுபோன்று திருமணங்கள் செய்து மாப்பிள்ளை வீட்டினரை ஏமாற்றியது தெரியவந்தது.

திருமணம் செய்து விட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்து இருக்கிறார். இதையடுத்து, விக்னேஷ்வரனை ஏமாற்றிய தேவி மற்றும் திருமண புரோக்கர்கள் பால முருகன், அமிர்தவல்லி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+