நள்ளிரவில் லிங்கா பார்க்க அலைமோதிய ரசிகர்கள்... நொறுங்கிய காசி தியேட்டர் கண்ணாடிகள்
சென்னை: வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடக்கவிருந்த லிங்கா சிறப்புக் காட்சியைக் காண பெரும் ரசிகர் கூட்டம் திரண்டதால், காசி தியேட்டரின் கண்ணாடிகள் நொறுங்கின.
இதனால் 1 மணி நேரம் தாமதமாகக் காட்சி ஆரம்பமானது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இன்று உலகம் எங்கும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி உலக அளவில் பிரபலமானது. படம் வெளியாக பத்து மணி நேரம் இருப்பதற்கு முன்பே இந்தக் காட்சி ரசிகர்களுக்கென திரையிடப்படும்.
இந்தக் காட்சியைக் காண தாரை தப்பட்டை, அதிர்வேட்டுக்களுடன் வந்துவிடுவார்கள் ரசிகர்கள். இன்று ரஜினியின் பிறந்த நாளும் சேர்ந்து கொண்டதால், இரட்டை மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் காசி தியேட்டருக்கு படையெடுத்தனர்.
இரவு 11 மணியிலிருந்தே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்தது. 12 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க, ரஜினி கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

அப்போது காசி தியேட்டரின் கொள்ளளவை விட மூன்று மடங்கு ரசிகர்கள் குவிந்துவிட்டனர் காசியில். போக்குவரத்தும் பாதிக்க ஆரம்பித்தது. எனவே டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் தவிர, மீதி அனைவரையும் வெளியேற்றியது தியேட்டர் நிர்வாகம். மீண்டும் 12.30 மணிக்கு ரசிகர்களை உள்ளே அனுமதித்தனர்.
அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டித் தள்ளியதில் காசி தியேட்டரின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதனால் நள்ளிரவுக் காட்சி நிறுத்தப்பட்டது. 1 மணி நேரம் கழித்து காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications