For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணசாமியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் இறுதி ஊர்வலம் சொந்த ஊரான விளக்குடியில் தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணசாமி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு- வீடியோ

    திருத்துறைப்பூண்டி: மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் இறுதி ஊர்வலம் சொந்த ஊரான விளக்குடியில் தொடங்கியுள்ளது.

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

    Kasthuri Mahalingam father Kirshnasamis last journey started

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததால் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் தனது தந்மை கிருஷ்ணசாமியுடன் எர்ணாகுளம் சென்றார்.

    மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணசாமி உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் அன்றிரவே சொந்த ஊரான விளக்குடிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் கிருஷ்ணசாமியின் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

    English summary
    Kasthuri Mahalingam father Kirshnasami's last journey started. Kirshnasami passed away on May 6th in Ernakulam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X