கதிராமங்கல மக்கள் போராட்ட எதிரொலி.. ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகத்தில் போலீசார் குவிப்பு
கதிராமங்கல மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியதை அடுத்து சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகம், ராஜ்பவன் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதா
சென்னை: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கதிராமங்கல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. போராட்டக்காரர்கள் 3 பிரிவாக பிரிந்து சென்னை தலைமை செயலகம், ராஜ் பவன், பாஜக அலுவலகம் என 3 இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சென்னையில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தின் 2 நுழைவாயில்களிலும் முழுமையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு போராட்டம் நடத்த வரும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஓஎன்ஜிசியை எதிர்த்து போராடிய போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications