தமிழகத்தில் எங்குமே விஜய்யின் 'கத்தி'யை திரையிடக் கூடாது: திருமா எச்சரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான கத்தி என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாகத் தெரிய வருகிறது. இந்தப் படத்தை லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஈழத்தைச் சேர்ந்த சுபாஷ்கரனும், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக செய்திகள் வருகின்றன.
இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவோடு தொழில் ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன், தமிழ்த் திரையுலகில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ ராஜபக்சே முயற்சிப்பதாகவும், தமிழகத்தில் இளம் தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணி திரண்டு விடக் கூடாது என்பதற்காகவும் இதுபோன்ற முயற்சிகள் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது. இது நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது. இது தமிழின விரோதி ராஜபக்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்து கொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications