செங்கோட்டை காட்டுக்குள்... ரூ. 1.70 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கும் விடுதிகள்
செங்கோட்டை: செங்கோட்டை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ.1.70 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தங்கும் விடுதிகளை கேரள அமைச்சர் திறந்து வைத்தார்.
கேரளமாநிலம் தென்மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை மேம்படுத்தி அங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, தென்மலையில் உள்ள கல்லடா நீர்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் படகு வசதி, வனப்பகுதியில் உள்ள செந்தூரனி ஆற்றின் குறுக்கே கயிறு பாலத்தில் நடப்பது, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவது, இசைக்கு வண்ண விளக்குகள் நாட்டியமாடுதல் என எராளமான வசதிகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 1.70 கோடி செலவில் செந்தூரணி வனப்பகுதியில் மட்டுமின்றி தென்மலையில் இருந்து ஆரியங்காவு ரோஸ் மலை வரை தனி வாகனத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனப்பகுதியில் விடுதிகள் கட்டப்பட்டன.
செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தினுள் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து வரும் நீரினால் இங்குள்ள நீர்நிலைகள் உருவாகியுள்ளது. இச்சரணாலயம் சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்தும் அனைத்து வளர்ச்சி வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. மேலும் தென்மலையை சுற்றி 50 கிமீ சுற்று புறங்களில் சூழ்நிலை சுற்றுலா மையங்கள் உருவாகியுள்ளது. சூழ்நிலை சுற்றுலா வழியாக தென்மலை பகுதியை மேம்படுத்துவது கேரள அரசின் முக்கியமான திட்டமாகும்.
மேலும் சூழ்நிலை சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆதிவாசிகலும், உள்ளூர்வாசிகளும் வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது இச்சூழ்நிலை சுற்றுலா மையங்களுக்கும், அதை சார்ந்த இடங்களுக்கும் தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிறது. சுற்றுசூழல் பதிவு, மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சிகள் இந்த பகுதியில் நடைபெறுகிறது. சுற்றுலா செயல்பாடுகளின் சுற்று சூழல் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த சுற்றுலா திட்டத்தின்படி இங்குள்ள வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று அம்மாநில அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைப் பெற்றது. இவ்விழாவில் புனலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜீ, ஊராட்சிமன்றதலைவர் ஜெகதாம்பாள், சைலஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications