தெலுங்கு விவகாரத்தில் சீமான் உடனடியாக தீர்வு காண வேண்டும்: நாகராஜ்
சென்னை: தெலுங்கு இன மக்களை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
'மொழியால் மாறுபட்டாலும்,உணர்வால் தமிழர்களாக பல மொழி பேசுகின்ற மக்களும் ஒற்றுமையாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்குமொழி பேசுகின்ற மக்கள் தமிழகத்தின் பல இடங்களில் ஒன்றுகூடி நடிகர் சீமானின் பேச்சுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போன்ற தலைவர்களை, முன்உதாரணமாக வைத்து, இளைஞர்கள் ஆர்வத்தோடு அரசியலில் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னோடிகளை வரலாற்று ரீதியாக குற்றம் சாட்டுவதும், அதற்காக கேள்வி கேட்கின்ற இளைஞர்கள் தாக்கப்படுவதும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யார்செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இளைஞர்களை நாகரீக அரசியலுக்கு வழிநடத்த வேண்டியது சீமான் போன்றவர்களுடைய முக்கிய கடமையாகும். தற்போது கொந்தளித்துப்போயிருக்கும் தெலுங்கு பேசும் மக்களுடைய மனக்குமறலை அன்பால் அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமை நடிகர் சீமான் அவர்களுக்கு உள்ளது. இதை மேலும் முற்ற விடாமல், நடிகர் சீமான் அவர்கள் உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்''என்று நாகராஜ் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications