கொடநாடு கொலை வழக்கு... ஐவர் மீது குண்டர் சட்டம்: வீடியோ
கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார்.
கோத்தகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 24ஆம்தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். மேலும் அங்கு கொள்ளையும் நடந்தது.

இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் 11 பேருக்கு இதில் தொடர்புள்ளது என கண்டறிந்தனர். அதில் முதன்மை குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் 10 பேரை போலீசார் கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர். அவர்களில் உதயகுமார், சதீசன், தீபு, மனோஜ், குட்டி ஆகிய ஐவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை சம்பந்தமாக நிறைய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications