கும்பகோணம் பள்ளி தீ விபத்து: அரசு வழக்கறிஞர் என்ன சொல்கிறார்?
சென்னை: கும்பகோணம் தீ விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் இன்றுவரை சிகிச்சை பெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அரசு வழக்கறிஞர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

குழந்தைகள்
16.6.2004 அன்று கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர், 18 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் தீக்காயத்திற்காக இன்று வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சாட்சியங்கள்
தீ விபத்து குறித்து அப்போதைய எஸ்.பி. ராஜேந்திரனின் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி. கல்யாண சுந்தரம் விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் மொத்தம் 298 பேர் சாட்சிகளாக கருதப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை
தீ விபத்து வழக்கில் 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் அரசு தலையீட்டின்பேரில் விடுவிக்கப்பட்டனர்.

நீதிமன்றம்
தீ விபத்து வழக்கு 2007ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் ஜே.எம்.1ல் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தஞ்சை முதலாவது அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் வழக்கை விசாரித்து 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications