Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 11ம் ஆண்டு நினைவு தினம் – பெற்றோர் கண்ணீர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. குழந்தைகளின் படத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தீ விபத்து நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்து விட்டாலும் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் இன்னும் சோகத்துடனே உள்ளனர். குழந்தைகள் இழப்பை அவர்களால் ஈடு செய்ய முடியவில்லை.

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சோக சம்பவத்தின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

11ம் ஆண்டு நினைவு தினம்

11ம் ஆண்டு நினைவு தினம்

94 குழந்தைகளின் பெற்றோர்களும் தங்களது வீடுகளில் குழந்தைகள் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். தங்கள் குழந்தை விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்களை படையலிட்டனர். பின்னர் குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று வழிபட்டனர்.

மலர் தூவி அஞ்சலி

மலர் தூவி அஞ்சலி

தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன் பலியான 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கும்பகோணம் பாலக்கரையில் இறந்த குழந்தைகள் நினைவாக நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் அஞ்சலி செலுத்தினார்கள்.

காயமடைந்த 18 குழந்தைகள்

காயமடைந்த 18 குழந்தைகள்

விபத்தில் காயமடைந்த 18 குழந்தைகளில் மெர்சி என்ற பெண் தற்போது நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதே போல் கவுசல்யா என்ற பெண்ணிற்கு வலது கை முழுவதுமாக தீயில் கருகி விட்டதால் அவரால் எழுதக் கூட முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை

குற்றவாளிகளுக்கு தண்டனை

இந்த விபத்து தொடர்பாக மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து 21 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மேலும் 11 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை கடந்த ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சோகத்தில் பெற்றோர்கள்

சோகத்தில் பெற்றோர்கள்

குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்திய பெற்றோகள், இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தின நாளாக அரசு அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கூடுதல் நிவாரணம்

கூடுதல் நிவாரணம்

ஆண் குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் தங்களுக்கு இறுதி சடங்கு செய்ய மகன் இல்லையே என வருத்தத்துடன் கூறினர். ஆண் குழந்தைகளை பறிகொடுத்து பெண் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது மகன் இருந்தால் பணம் சம்பாதித்து உதவி செய்திருப்பான் என்றனர். தங்களுக்கு அரசு இழப்பீடாக ரூ. 1 லட்சம் மட்டுமே உதவி செய்து உள்ளது. இது தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளோம் என்றும் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இது தொடர்பான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+